காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது.
பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.
பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.
மேலும்
காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.

2 comments:
உண்மைதானே ,
எவனெவன் பிரிய வேண்டுமென்று விரும்புகிறானோ , அவனை எல்லாம் பிரிச்சு விட்டுவிட்டால் நமக்கு எதுக்கு வெட்டியா செலவு, சீனா எதுவரைக்கும் கேக்குதோ அதை கொடுத்தரலாம்,
வங்க தேசம் , பாகிஸ்தானும் எவ்வளவு தூரம் கேக்குதோ அதை அந்தந்த பகுதி
மக்களோட அப்படியே கொடுத்தரலாம்.
என்ன ஓரளவுக்குதான கேப்பானுங்க, இல்லை டெல்லியையும்,சென்னையையுமா கேப்பானுங்க.
no we should not give anything to anyone.if you give kashmir, then sikh terrorist will ask for punjab state aka khalistan. china willl ask arunachal prdesh. then muslims terrorist will ask for whole of indian just because islamic rats have ruled this nation in the past.hence we should not anything to anyone.if north india goes to islamic terrorist then there will danger for south india. and they will as for hyderab just becuase nizam ruled hy derabad,. then they will ask banglore mysore just because tipu sultan ruled them. we should not give anything to any one
Post a Comment