Wednesday, October 28, 2009

தலிபான்களுக்கு இந்தியா நிதியுதவி - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்  பாகிஸ்தானை சீர்குலைப்பதற்காக தலிபான் தீவிரவாதிகளுக்கு சிலர் நிதியுதவி அளித்து வருவதாகவும் அதில் இந்தியாவும் ஒன்று என்றும்  குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க படைகளுடன் பாகிஸ்தான் படைகளும் இணைந்து தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டை பாகி்ஸ்தான் முன் வைத்துள்ளது. ரஹ்மான் மேலும் கூறுகையில்,

தலிபான்களுக்கு இந்திய நிதியுதவி குறித்து முழு விவரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. என்னுடைய குற்றச்சாட்டை இந்தியாவின் உள்துறை அமைச்சர் மறுத்தால், அவருடைய கருத்தை நிராகரிப்பதில் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.