Saturday, September 26, 2009

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது - ஐ.நா துணைச் செயலாளர்

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளார் முகாம்களைப் பார்வையிட வந்த ஐ.நா. மனித உரிமைப் பிரிவு துணைச் செயலாளரும், சிறப்புத் தூதருமான வால்டர் காலின். 

இவ்வாறு இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் சிறப்பான வசதிகளைச் செய்துள்ளதாகவும், நல்ல வசதிகளுடன் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணிக் பார்ம் முகாம், கதிர்காரமல் நலன்புரி கிராமங்கள் ஆகியவற்றுக்குச் சென்று பார்த்தார் காலின்.

அவருடன் வவுனியா அரசுப் பிரதிதிநிதி சார்லஸ், வன்னி பாதுகாப்புப் படை கமாண்டர் கமல் குணரத்னே ஆகியோரும் உடன் சென்றனர்.

இடம் பெயர்ந்த மக்களின் திறமைகளை வளர்ப்பதற்காக அவர்களுக்காக செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமையும் காலின் பாராட்டினார்.

எந்தவித அடிப்படை வசதியும் இன்றி, ஆடு மாடுகளைப் போல தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டி வரும் நிலையி், முகாம் நிலை குறித்து காலின் திருப்தி அடைந்துள்ளதாக இலங்கை ராணுவ இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.